districts

img

கொள்ளிடம் நீர் உட்புகுந்து தத்தளிக்கும் கிராமங்கள்

மயிலாடுதுறை, ஆக.3 - மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளி டம் பகுதிகளில் ஆற்றுநீர் உட்புகுந்த தால் கிராமங்கள் தத்தளித்து வரு கின்றன.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர் முழுவதும் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணை நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரு கிறது.

அந்த உபரி நீரானது தற்போது  காவிரி கடைமடை பகுதியான மயிலாடு துறை  மாவட்டம் சீர்காழியை ஒட்டியுள்ள  கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று  பழையாறு அருகே வங்க கடலில் கலக்கிறது.

தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வரும் நிலையில்,  கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந் துள்ள திட்டு மற்றும் படுகை கிராமங் களான சந்தைபடுகை, நாதல் படுகை,  முதலைமேடு திட்டு உள்ளிட்ட கிரா மங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகள், பயிர்கள் என அனைத்தும் தண்ணீர் மூழ்கியுள்ளன.

நாதல்படுகை கிராமத்திற்கு செல்லும்  சாலையை கடந்து வெள்ளநீர் செல்வ தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்கள் கரையில் அமைந்துள்ள தற்கா லிக முகாம்களுக்கு வரத் தொடங்கி யுள்ளனர்.

மீட்பு பணிக்காக தீயணைப்பு மீட்புத் துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை யினர், மருத்துவக் குழுவினர், காவல்  துறையினர் உள்ளிட்டோர் வெள்ள நீர்  சூழ்ந்த கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்.